உயிரின் உயிரே உயிரின் உயிரே
நதியில் வழியில் காத்துக்கிடக்கின்றேன்
ஈரஅலைகள் நீரைவாரி முகத்தில் இறைத்தும்
முழுதும் வேர்க்கின்றேன்
நகரும் நெருப்பாய் கொழுந்துவிட்டெரிந்தேன்
அணைந்தபின்பும் கனலின் மேலெரிந்தேன்
காலைப்பனியாக என்னை வாரிக்கொண்டாள்
நேரங்கூட எதிரியாகிவிட
யுகங்கள் ஆக வேடம் மாறிவிட
அணைத்துக்கொண்டாயே பின்பு ஏனோ சென்றாய்
(உயிரின் உயிரே)
சுவாசம் இன்றி தவிக்கிறேனே
உனது மூச்சில் பிழைக்கிறேனே
இதழ்களை இதழ்களால் நெருப்பிட வாபெண்ணே
நினைவு எங்கோ நீந்திச்செல்ல
கனவு வந்து கண்ணைக் கிள்ள
நிழல் எது நிஜம் எது குழம்பினேன் வாபெண்ணே
காற்றில் எந்தன் கைகள் ரெண்டும்
உன்னை அன்றி யாரைத் தேடும்
விலகிப் போகாதே தொலைந்து போவேனே நான் நான் நான்
(உயிரின் உயிரே)
இரவின்போர்வை என்னை சூழ்ந்து
மெல்ல மெல்ல மூடும் தாழ்ந்து
விடியலை தேடினேன் உன்னிடம் வாபெண்ணே
பாதம் எங்கும் சாவின் ரணங்கள்
நரகமாகும் காதல் கணங்கள்
ஒருமுறை மடியிலே உறங்குவேன் வாபெண்ணே
தாமதிக்கும் ஒவ்வொரு கணமும்
தவணை முறையில் மரணம் நிகழும்
அருகில் வாராயோ விரல்கள் தாராயோ நீ நீ நீ
(உயிரின் உயிரே)
Thursday, October 25, 2007
உயிரின் உயிரே
at
Thursday, October 25, 2007
Posted by
A. kalidasan
Labels: Kakka Kakka
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment