வெண்மதி வெண்மதியே நில்லு நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு
வெண்மதி வெண்மதியே நில்லு நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு
வானம்தாம் உன்னுடைய இஷ்டம் என்றால் மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம்
உன்னை இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே
உன்னாலே நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்
(வெண்மதி)
ஜன்னலின் வழி வந்து விழுந்தது
மின்னலின் ஒலி அதில் தெரிந்தது
அழகு தேவதை அதிசய முகமே
ஆஹாஹா
தீப்பொறி என இரு விழிகளும்
தீக்குச்சி என எனை உரசிட
கோடிப் பூக்களாய் மலர்ந்தது மனமே
அவள் அழகைப் பாட ஒரு மொழியில்லை
அளர்ந்து பார்க்கப் பல விழியில்லை
என்ன இருந்தபோதும் அவள் எனதில்லையே
மறந்துபோ மனமே
ஓ ஓ ஓ...
(வெண்மதி)
அஞ்சு நாள் வரை அவள் பொழிந்தது
ஆசையின் மழை அதில் நனைந்தது
நூறு ஜென்மங்கள் நினைவினில் இருக்கும்
ஆறு போல் இந்த நாள் வரை உயிர் உருகிய
அந்த நாள் சுகம் அதை நினைக்கயில்
ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும்
ஒரு நிமிஷம் கூட என்னைப் பிரியவில்லை
விவரம் ஏதும் அவள் அறியவில்லை
என்ன இருந்தபோதும் அவள் எனதில்லையே
மறந்துபோ மனமே
லல்ல ஹி லாஹி லாஹி...
உன்னை இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே
உன்னாலே நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்
Thursday, October 25, 2007
வெண்மதி வெண்மதியே நில்லு
at
Thursday, October 25, 2007
Posted by
A. kalidasan
Labels: Minnale
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment