Showing posts with label Simmarasi. Show all posts
Showing posts with label Simmarasi. Show all posts

Tuesday, August 21, 2007

வானத்து நிலவெடுத்து

வானத்து நிலவெடுத்து வாசலில் வைக்கட்டுமா
செவ்வந்தி பூக்களிலே பந்தலை போடட்டுமா
ஆனந்த கும்மி போடுது நெஞ்சம்
ஆசையால் கண்கள் தேடுது தஞ்சம்
அழகு பூங்கொடியே காதலை கட்டி வைக்க கட்டுத்தறி இல்லை
வானவில் மழை பட்டு கரைவதும் இல்லை

(வானத்து)

உங்கள் வீட்டுத் தோட்டத்தில் நம் நெஞ்சம் சுற்றுவதென்ன
கண்ணாமூச்சி ஆட்டத்தில் பூக்கள் கை தட்டுவதென்ன
சிரிக்கின்ற மலருக்கு கவிதை சொல்லிக்கொடு
சிலிர்க்கின்ற இரவுக்கு கனவை அள்ளிக்கொடு
கன்னத்தில் கன்னத்தில் மீசை உரசுது
கண்ணுக்குள் கண்ணுக்குள் மின்னலடிக்குது
காதலை கட்டி வைக்க கட்டுத்தறி இல்லை
வானவில் மழை பட்டு கரைவதும் இல்லை

(வானத்து)

சித்திர பெண்ணே வெட்கத்தை தூரத்தில் போக சொல்லு
கட்டளையிட்டு சொர்க்கத்தை பக்கத்தில் நிற்க சொல்லு
இனிக்கின்ற இள்மைக்கு சிறகை கட்டிவிடு
மிதக்கின்ற நிலவுக்கு நடக்க கற்று கொடு
என்னவோ என்னவோ எனக்குள் நடக்குது
அம்மம்மா அம்மம்மா மனசு பறக்குது
காதலை கட்டி வைக்க கட்டுத்தறி இல்லை
வானவில் மழை பட்டு கரைவதும் இல்லை

(வானத்து)