Thursday, August 16, 2007

பாடல்: அய்யங்காரு வீட்டு அழகே

அய்யங்காரு வீட்டு அழகே
உன் போல் அழகி பிறக்கவுமில்லை
இனிமேல் பிறந்தால் அது நம் பிள்ளை
உன் போல் சமர்த்து உலகினில் இல்லை
காதலன் சமர்த்து காதலில் தொல்லை
அறியாமைதான் இங்கே பேரின்பம் அன்பே
காதலின் வகுப்பில் மாணவன் தான் பண்டிதனே

மகரந்தப் பொடிகளை எடுத்து
அதில் மஞ்சள் தங்கம் கொஞ்சம் இட்டு இடித்து
சிறு கன்னம் எங்கும் சுண்ணம் பூசி வண்ணம் செய்தானோ
ஒரு கோடி பூக்கள் கொண்டு ஜோடி பூக்கள் செய்தானோ
உன் உதடு சேர்ந்தால் பூப்படையும் வார்த்தை
நம் உதடு சேர்ந்தால் பூப்படையும் வாழ்க்கை
அள்ளi சேர்த்தே உந்தன் உயிருக்குள் அனுமதி ஒருமுறை

உச்சி வானை தத்தித் தாவி இழுத்து
உன் நட்சத்திர தோரணங்கள் சமைத்து
நீ முத்தத்தாமப் பந்தற் கீழே மாலை கொள்வாயா
உன் முத்தத்தாலே வாழும் வண்ணம் ஈரம் செய்வாயா
வான்மழையில் நனைந்தால் பைகள் உருவாகும்
ஆண்மழையில் நனைந்தால் உயிர்கள் உருவாகும்
தயங்காதே மெல்ல தொடங்கட்டும் அழகிய தவறுகள்

No comments: