வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா
உன் நினைவில் என் நினைவே சொர்க்கம் தானம்மா
சின்ன மூக்குத்திப்பூ வரும் முதல் சந்திப்பூ
அந்தப் பாலாற்றில் நீராட வா...
வெண்ணிலவே வெண்ணிலவே வெண்ணிக்கோலமா
அத்தை மகள் ஆசையிலே தொட்ட நாணமா
சின்ன மூக்குத்திப்பூ வரும் முதல் சந்திப்பூ
அந்தப் பாலாற்றில் நீராட வா...
(வெண்ணிலவே)
வெள்ளிப்பனி மேகங்கள் செல்லும் ஊர்கோலங்கள்
அவள் பாதத்தில் எனைச் சேருங்கள்
அந்த மழை மேகங்கள் எந்தன் எதிர்காலங்கள்
காதல் தீவுக்கு வழிகாட்டுங்கள்
நெஞ்சில் அலை மோதும் கடல் போல ஓசை
வந்து கரையேரும் அலைக்கென்ன ஆசை
இன்ப மயக்கம் என்ன? சின்னத் தயக்கம் என்ன?
இந்தக் காலங்கள் தனிக்கோலங்கள் ஹோ...
(வெண்ணிலவே)
ஒரு புல்லாங்குழல் பாடும் தனிராகங்கள்
உந்தன் தேகத்தில் சுரம் பாடுமா
அந்த சுரம் பாடினால் தொட்டுச் சுகம் தேடினால்
கன்னி மாடத்தில் குளிர் காலமா
நித்தம் ஒரு கோடி கனவோடு தூக்கம்
புத்தம் புதுப் பார்வை புரியாத ஏக்கம்
ரத்த நாளங்கலில் ஓடும் தாளங்கலில்
ஒரு தாலாட்டுத்தான் பாடுமா...
வெண்ணிலவே வெண்ணிலவே கரைந்தது ஏனம்மா
உன் நினைவில் என் நினைவே கலைந்தது ஏனம்மா
சின்ன மூக்குத்திப்பூ வரும் முதல் சந்திப்பூ
அந்தப் பாலாற்றில் நீராட வா...
Tuesday, August 21, 2007
வெண்ணிலவே வெண்ணிலவே
at
Tuesday, August 21, 2007
Posted by
A. kalidasan
Labels: Kazhamellam Kadhal Vazhaka
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment