பாடல்
பழனி பாரதி
இசை
இளையராஜா
விழியில் விழி மோதி இதயக் கதவு இன்று திறந்ததே..
இரவு பகலாக இதயம்; கிளியாகிப் பறந்ததே..
ஏ.. காதல் நெஞ்சே.. யாரோடு சொல்வேன்..
வந்து போன தேவதை... நெஞ்சை அள்ளிப் போனதே..
நெஞ்சை அள்ளிப் போனதே..
(விஐய்;)
ஓ பேபி.. பேபி.. என் தேவ தேவி..
ஓ பேபி.. பேபி.. என் காதல் ஜோதி..
ஒரு பார்வை வீசிச் சென்றால்.. உலகம் விடிந்ததெங்கே..
வார்த்தை பேசவில்லை.. எல்லாம் புரிந்ததெங்கே..
இனி இதயமெல்லாம் தினமும் தினமும் மழை தான்..
ஓ பேபி.. பேபி.. என் தேவ தேவி..
(இசை)
பார்வை விழுந்ததும்.. உயிர்வரிகள் தேகம் நனைந்தது..
ஸ்வாசம் முழுவதும் பூக்களின் வாசம் நிறைந்தது..
நேற்று இந்த மாற்றம் எந்தன் நெஞ்சில் இல்லை..
காற்று எந்தன் காதில் கவிதை சொல்லவில்லை..
ஹோ.. இருதயம் இருபக்கம் துடிக்குதே..
அலைவந்து அலைவந்து அடிக்குதே..
எனக்குள்ளே தான்....
ஓ பேபி.. பேபி.. என் தேவ தேவி..
ஓ பேபி.. பேபி.. என் காதல் ஜோதி..
(இசை)
ஐPவன் மலர்ந்தது.. புது சுகம் எங்கும் வளர்ந்தது..
தெய்வம் எழுதிடும் தீர்ப்புகள் இதுதான் புரிந்தது..
ஊரைக் கேட்கவில்லை.. பேரும் தேவையில்லை..
காலம் தேசம் எல்லாம்.. காதல் பாணியில்லை..
ஓ.. தேவதை தரிசனம் கிடைத்ததே..
ஆலய மணி இங்கு ஒலித்ததே..
என்னைத் தந்தேன்..
ஓ பேபி.. பேபி.. என் தேவ தேவி..
ஓ பேபி.. பேபி.. என் காதல் ஜோதி..
ஒரு பார்வை வீசிச் சென்றால் உலகம் விடிந்ததெங்கே..
வார்த்தை பேசவில்லை.. எல்லாம் புரிந்ததெங்கே..
இனி இதயமெல்லாம் தினமும் தினமும் மழை தான்..
ஓ பேபி.. பேபி.. என் தேவ தேவி..
ஓ பேபி.. பேபி.. என் காதல் ஜோதி..
Tuesday, August 21, 2007
விழியில் விழி மோதி
at
Tuesday, August 21, 2007
Posted by
A. kalidasan
Labels: Kadhalukku Mariyadhai
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment